பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

Mahendran

திங்கள், 28 ஜூலை 2025 (12:13 IST)
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், ஆகஸ்ட் 3 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதன் முக்கிய அம்சங்கள் இதோ:
 
ஆகஸ்ட் 3 முதல் 28 வரை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மக்களை சந்திப்பார். இது கட்சியை வலுப்படுத்தவும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கவும் உதவும்.
 
ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
 
 தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்காதது குறித்த கேள்விக்கு, "நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா?" என்று பதிலளித்தார். தேவைப்பட்டால் பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்திப்போம் என்றார்.
 
தந்தையின் கனவை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், தேமுதிக ஒரு கட்சி, கிளப் அல்ல என்றும், மக்களுக்கு சேவை செய்வதே மகிழ்ச்சி என்றும் விஜயபிரபாகரன் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்