இன்று முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (07:30 IST)
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கார், ஜீப், வேன்களுக்கு இதுவரை 90 ரூபாய் சுங்கச்சாவடி கட்டணமாக இருந்த நிலையில் தற்போது பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 
அதேபோல் பஸ் லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 310 ரூபாயிலிருந்து 355 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சுங்கச்சாவடி உயர்த்தப்பட்ட இடங்கள் பின்வருமாறு:
 
விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்