Free fire விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது- நீதிபதிகள் கருத்து

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (14:45 IST)
Free fire விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை  கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பப்ஜி, ஃப்ரிபயர் பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை.

இந்த  நிலையில், இன்று,  உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை Free fire விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதது என கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறுத்து  நீதிபதிகள் கூறியுள்ளதாவது: பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒருவருக்கொருவர் இந்த கேம் விளையாட்டினால் பேசிக் கொள்வதில்லை. ஃப்ரீ பயர் விளையாட்டில் உள்ள ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்