மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வரும் 27ம் தேதி முதல் வழங்கப்படும்! - தமிழக அரசு

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (21:09 IST)
மே மே மாதத்திற்காக விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் ரேசன் கடைகளில் வரும் 27 ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிற்கு தேவையான 19 வகை மளிகைப் பொருட்களின் தொகுப்பை ரேசன் கடைகளில் ரூபாய் 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என 
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஆனால் 500 ரூபாய் மதிப்பிலான இந்த அத்தியாவசிய பொருட்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது இதுகுறித்து பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.500 மதிப்பில் மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்தது. இதனை ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகைப்பொருட்களை வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மே மே மாதத்திற்காக விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் ரேசன் கடைகளில் வரும் 27 ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்