24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

Mahendran

சனி, 1 நவம்பர் 2025 (13:18 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வழியாக குஜராத் கடற்கரைப்பகுதிகளை நோக்கி ஒரு காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல், தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், நவம்பர் மூன்றாம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்