முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக துணைத்தலைவராக நியமனம் !

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (18:00 IST)
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை கர்நாடக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தமிழக அரசியலில் ஈடுபட போகிறார் என பேசிக்கொள்ளப்பட்டது. 

ஆனால் அவர் தற்சார்பு விவசாயம் செய்து கொண்டு அது குறித்து பேசி வந்தார். இந்நிலையில் டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை பாராடிய அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் துணைத்தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமித்து அக்கட்சி தலைமை நியமித்துள்ளது

தமிழக பாஜக தலைவராக எல், முருகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்