வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு.. கரையை கடப்பது எப்போது? எங்கே?

Siva

திங்கள், 21 அக்டோபர் 2024 (11:10 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் இன்று உருவாகும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், நாளை இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் தமிழக கடற்கரையை விட்டு விலகி இருப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதாகவும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த புயல் அக்டோபர் 23ஆம் தேதி ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

"டானா" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் மட்டும் ஓரளவு மழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்