மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாகவும், அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகும் புயலின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில், இடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களிலும் சூறாவளி காற்று வீசும் என்றும், அதிகபட்சமாக 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.