அமைச்சர் பொன்முடியின் மேலும் ஒரு வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (11:32 IST)
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் மேலும் ஒரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விழுப்புரம் சண்முகபுரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலையில் இருந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
 
அமைச்சர் பொன்முடியின் வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவை திறந்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்