சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய 5 டன் பப்பாளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவிலே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் பலர் பொருட்களை இங்கு வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு சில வியாபாரிகள் சிலர் பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க ரசாயனம் தடவுவதாகவும், சிலர் தரமற்ற பொருட்களை விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் ஒரு கடையில் ரசாயனம் தடவிய 5 டன் பப்பாளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து விதிமுறையை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.