அமைச்சர் எ.வ.வேலுவின் காரை சோதனை செய்த பறக்கும் படையினர்.. பெரும் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (16:03 IST)
கள்ளக்குறிச்சி அருகே சென்ற அமைச்சர் எ.வ.வேலு காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்பதும் குறிப்பாக ரூ.50,000க்கு அதிகமாக ரொக்க பணம் எடுத்துச் சென்றால் தகுந்த ஆவணங்கள் காட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் பறக்கும் படையினர் லட்சக்கணக்கான மதிப்புள்ள ரொக்க பணத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று திடீரென அமைச்சர்  பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு சென்ற காரை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மனம் பூண்டி என்ற கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது அமைச்சர் எ.வ.வேலு கார் அந்த பக்கம் வந்தது. அவருடைய காரையும் பறக்கும் படை சோதனை செய்ததாகவும் ஆனால் அந்த காரில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்