ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதை அடுத்து இன்று 80 சதவீதம் படகுகள் ராமேஸ்வரத்தில் கடலுக்குள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என்று கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க அரசு தடை செய்துள்ளது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் அதற்கு பதிலாக மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் 750 விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் வேலை இல்லாமல் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 80 சதவீத படகுகள் இன்றே கடலுக்குள் செல்லவில்லை என்றும் மீதமுள்ள 20 சதவீத படகுகளும் ஏப்ரல் 15ஆம் தேதி நிறுத்தப்படும் என்றும் மீனவர்கள் மத்தியில் கூறப்படுகிறது
இந்த காலங்களில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 16ஆம் தேதி முதல் மீண்டும் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.