மீன் குழம்பு சாப்பிட்டு ஒருவர் மரணம் ; 4 பேர் கவலைக்கிடம் : கடலூரில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (13:17 IST)
வீட்டில் சமைத்து சாப்பிட்ட மீன் குழம்பு ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பண்ருட்டி அருகே குடுமியான் குப்பம் என்ற பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பெருமாள். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், கடைக்கு சென்று மீன் வாங்கி வந்தார் பெருமாள். அதை குழம்பு வைத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர்.
 
சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெருமாள் மரணம் அடைந்தார். பாதிக்கப்பட்ட அவரின் குடும்பத்தினர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் கடலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்