ஆளுனருக்கு அனுப்பப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இம்முறை ஒப்புதல் அளிப்பாரா?

வெள்ளி, 24 மார்ச் 2023 (09:54 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை மூலம் இன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன
 
இம்முறையாவது ஆளுநர் ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பாரா அல்லது கிடப்பில் போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்