சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவின் வாக்கெடுப்பு: அதிமுக வெளிநடப்பு

வியாழன், 23 மார்ச் 2023 (12:47 IST)
சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேறிய நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
 
வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் ] வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து பேசுவதற்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சார்பாக பேச அனுமதி கொடுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்குவாதம் செய்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன், ஒரு கட்சிக்கு ஒருவர் என பேசக்கூறியுள்ளீர்கள். ஆனால், பெரும்பான்மை இல்லாதவரை பேச வைப்பது என்ன நியாயம்? என ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்