மூலப்பொருட்கள் கடும் விலையேற்றம்! – தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:26 IST)
தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோலிய விலை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து, வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. சாத்தூரில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

இதனால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், மூலப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் 11 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் சாத்தூர் உள்பட தமிழகத்தில் செயல்படும் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்