பெண் கைதியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கல்லுப்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி விஜயலட்சுமியை (22) முதுகுளத்தூர் போதலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து, பரமக்குடி பெண்கள் சிறையில் அடைத்தனர். ஆனால், விஜயலட்சுமி சிறையில் இருந்து எப்படியோ தப்பியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, பெண் கைதி விஜயலட்சுமியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார்.