குடும்பமாக செல்பவர்கள் சிங்கிள் டிக்கெட் எடுத்தால் போதும்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (09:08 IST)
மெட்ரோ ரயிலில் குடும்பமாக பயணம் செய்பவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சேர்த்து சிங்கிள் டிக்கெட்டாக எடுத்துக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இதுவரை ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் சென்றால் ஐந்து பேர்களுக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி ஒன்றாக பயணிக்கும் குடும்ப பயணிகளுக்கு ஒரே டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணம் செய்தால் ஒரே க்யூஆர் கோடு உடன் கூடிய டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என்றும், இந்த வசதியை குடும்பத்துடன் செல்லும் பயணிகள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும் நிலையில் தற்போது குடும்பத்துடன் 5 பயணிகள் வரை செல்லும் குடும்ப பயணிகள் ஒரே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்