கரூர் துயர சம்பவம்.. யார் காரணமோ அவர்களுடைய குடும்பம் விளங்காது: செல்லூர் ராஜூ சாபம்..!

Mahendran

வியாழன், 2 அக்டோபர் 2025 (15:41 IST)
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மிகுந்த மனவேதனையுடன் சாபம் விடுத்துள்ளார்.
 
அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய்யை ஆளாளுக்கு விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய செல்லூர் ராஜூ,   இதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, நெரிசலை காரணம் காட்டி முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, தவெகவினர் கேட்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டு, விசாலமான வேறு ஓர் இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காவல்துறை அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
 
கரூர் சம்பவத்தில் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்த துயரத்தை குறிப்பிட்டு பேசிய செல்லூர் ராஜூ, இத்தனை உயிர்கள் பலியானதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் சதி இருக்கிறதா என்பது குறித்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இத்தனை உயிர்களை காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது," என்று சாபமிட்டார். .
 
இனிமேலாவது தவெக தலைவர் விஜய், மாவட்டந்தோறும் பேருந்தில் பயணம் செய்வதை தவிர்த்து, ஒவ்வொரு தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்