கரூர் துயரத்திற்கு முதல்வர் எப்படி பொறுப்பாக முடியும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

Mahendran

வியாழன், 2 அக்டோபர் 2025 (12:23 IST)
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்  "கரூர் சம்பவத்துக்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ, அதை அவர் செய்திருக்கிறார்," என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசினார்.
 
"இன்றைக்குப் பொதுவாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பார்ப்பதற்கே மக்கள் பயப்படுகிறார்கள்.கரூரில் நடந்தது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு உயிர்கூட பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையும் அதற்கு வழிகாட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்," என்று அவர் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் உட்படப் பல நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த விபத்து குறித்து வீடியோ வெளியிட்ட விஜய், தமிழக முதல்வர் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு டாக்டர் ராமதாஸ் இன்றைய பேட்டியில் பதிலளித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்