டாஸ்மாக் அங்கேயே இருக்கட்டும்:பள்ளிக்கூடத்தை மாற்றுங்கள்! மக்களின் வினோதப் போராட்டம் !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (09:11 IST)
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கு அருகே விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை தொடர்பாக மக்கள் நூதனமானப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா மைலம்பாடி கிராமத்தில், விவசாய நிலத்தில் மக்களின் போராட்டத்துக்கு எதிராக தாசில்தார் துணையுடன் டாஸ்மாக்(கடை எண் 3571­) கடை திறக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மக்கள் பாதை என்ற அமைப்பைச் சேர்ந்த தமிழரசி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ’ இந்த மதுக்கடைக்கு அருகே வெறும் 300 மீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளியும்  கூட்டுறவு பால் சொஸைட்டியும் இருக்கின்றன. குடிப்பவர்களால் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விவசாய நிலத்தை தரிசு நிலம் எனப் பெயர் மாற்றி இந்த கடையைத் திறந்துள்ளனர். அதனால் டாஸ்மாக் கடை அங்கிருந்தாலும் பரவாயில்லை. பள்ளிக்கூடத்தையாவது வேறு இடத்துக்கு மாற்றுங்கள்’ என மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்