இந்நிலையில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையின் மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் 600 கோடிக்கும் மேல் மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து தனது வேதனைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராமதாஸ் ” இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.