இந்தியாவில் இருந்து ரூ.88032 கோடியை காணவில்லை என தகவல் வெளியாகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதில், ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், 8810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட நிலையில், 1760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.