தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த புகார் மனுவுக்கு ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட திட்டமிட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகாருக்கு ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு அளித்துள்ளது அதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக் குழு அங்கீகரிக்க வில்லை என்றும் ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருவதால் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகவும் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது