இக்கட்டான சூழ்நிலையில் ஈபிஎஸ்: சான்ஸுக்காக ஓபிஎஸ் வெயிட்டிங்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (14:54 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளாராம். 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணம் செல்கிறார். அதாவது ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவர் தமிழகத்தில் இருக்கமாட்டார். 
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் இங்கு இருக்க மாட்டார் என்ற நிலையில், அந்த 14 நாட்கள் முதல்வரின் பொறுப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. 
சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷாவிடமும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாம். இந்த ஆலோசனையின் முடிவில் அமித்ஷாவும் ஓபிஎஸ்-க்கு பலமான சிபாரிசை வழங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன. 
 
ஆனால், ஈபிஎஸ் தனது பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அமைச்சர்கள் அவர்கள் பொறுப்பை கவனிக்க வேண்டும். முதல்வரின் அமைச்சரவை பொறுப்பை அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஈபிஎஸ்-ன் இந்த் அமுடிவு நிச்சயம் ஓபிஎஸ்-க்கு ஏமாற்றத்தை அளிக்கும் என கட்சி தரப்பில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்