வாய்க்கால்களின் திறந்து விடப்படும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:04 IST)
கரூர் மாவட்டம் மாயனூர் கதவனையில் இருந்து 7 ஆயிரத்து 132 ஏக்கர் விவசாயத்திற்க்கு தென்கரை வாய்க்கலுக்கு வினாடிக்கு 500 கன அடி பழைய ஆயக்கட்டிர்க்கு 300 கன அடி  தண்ணீரை பாசனத்திற்க்கு போக்குவரத்துரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மலர்தூவி திறந்து வைத்தார்  
 

கரூரை அடுத்த மாயனூர் பகுதியில் உள்ள தவணையில் இருந்து தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் முதல்கட்டமாக 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் .தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மாயனூர் கதவணை க்கு 9 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களின் திறந்து விடப்படும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்படும். மாயனூர் கதவணை தண்ணீரை பாசனத்திற்க்காக திறந்து வைத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்

இந்த நிலழ்சியில் அரசு அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் என ஏராலமானோர் கலந்துகொண்டனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்