இங்கிலாந்தில் காவிக்கொடி கிழிப்பு; இரு பிரிவினர் இடையே மோதல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:54 IST)
ஆசியக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான மோதலில் இங்கிலாந்தில் இந்து கோவிலில் காவிக்கொடி கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை எழுந்துள்ளது.

இந்த மோதலில் லீசெஷ்டயர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றின் வெளியே இருந்த காவிக்கொடியை ஒருவர் பிடுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அங்கு நடந்த வன்முறை காரணமாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்