கரூரில் 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை

செவ்வாய், 13 ஜூன் 2023 (21:40 IST)
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று  சோதனை நடைபெற்று வரும் நிலையில்  கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.
 
கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்