அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை: கரு நாகராஜன் பேட்டி

செவ்வாய், 13 ஜூன் 2023 (15:27 IST)
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டனர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று அதிரடியாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்த பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன், ‘அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்