ரயில் மோதி தாயும் 2 குட்டி யானைகள் உயிரிழப்பு!!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (08:07 IST)
எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் மற்றும் 2 குட்டி யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
மங்களூர்  - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. கேரளாவில் இருந்து வந்துக்கொண்டிருந்த ரயில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 3 யானைகள் மீது மோதியது. 
 
இதில் சுமார் 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்த பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு யானைகளின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என அறிவித்தனர். யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை கடும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்