வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா? சென்னையில் மீண்டும் சிறப்பு முகாம்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (14:10 IST)
வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் உள்பட ஒரு சில திருத்தங்கள் செய்ய சமீபத்தில் சென்னையில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
18 வயது நிரம்பியவர்கள் புதிதாக செய்ய பெயரை சேர்க்கவும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர் முகவரி உள்பட திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு தேர்தல் மையங்களிலும் ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரி பார்த்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்