தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்கு, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாயை நடிகை குஷ்பு வாங்கியதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
தமிழகரத்தில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நட்சத்திர பேச்சாளர் என்ற முறையில், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது, ஒரு வேட்பாளருக்காக, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாய் நடிகை குஷ்பு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுவரை யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்றும், நடிகை குஷ்பு தான் இவ்வளவு பெரிய தொகை வாங்கியுள்ளார் என்றும், ஆனால், அந்த தொகையை கட்சி தலைமைக்கு கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டார் என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவரது விளக்கத்தை பலரும் ஆவலுடன் எதிர்பாக்கின்றனர்.