விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்குமா?

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:38 IST)
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரத்தில் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 
திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, இவ்வாரத்தில் தேர்தல் ஆணையம்  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டம் மட்டுமே முடிவடைந்த நிலையில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஏதாவது ஒரு தேதியை விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக புகழேந்தி  கடந்த 8ஆம் தேதி விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென மயக்கம் அடைந்தார். 
இதைத்தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் விரைவில் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்