விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.
இதை அடுத்து விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய கோர, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.