காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதலாக பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவிகள் சிலருக்கு கொரோனா உறுதியானது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இறுமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி வர நிர்பந்திக்க வேண்டாம் என்றும், நலமாக இருக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.