அட்ரஸ் இல்லாம போயிருவ.. பிரேமலதாவுக்கு ஈபிஎஸ் சிவியர் வார்னிங்??

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (13:29 IST)
அதிமுகவால் விலாசம் பெற்றவர்கள் துரோகம் இழைக்க நினைத்தால், அவர்கள் தங்களின் முகவரியை இழந்துவிடுவார்கள் என ஈபிஎஸ் எச்சரித்துள்ளார். 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் தங்களது பங்கிறகு அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் கூட்டணி ஒப்புதலின் போது எம்பி சீட் ஒன்று தருவதாக கூறியிருந்தால் அதனை இப்போது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து முதல்வரிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார். 
ஆனால், தேமுதிகவுக்கு எம்பி சீட் வழங்குவதாக அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தில் கூறவில்லை, பாமகவிற்கு தான் ஒரு சீட் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவால் விலாசம் பெற்றவர்கள் கட்சிக்கு துரோகம் இழைக்க நினைத்தால், அவர்கள் தங்களின் முகவரியை இழந்துவிடுவார்கள். 
 
ஒரு வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருந்தால், மணமுடிக்க கேட்பது நம்மூர் வழக்கம். அதுபோல்தான் எம்பி சீட் வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்கின்றன.  விரைவில் காலியாக உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்