அதிமுக தொண்டர்களை அச்சுறுத்த நினைப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (18:57 IST)
அதிமுக தொண்டர்களை அச்சுறுத்த நினைப்பதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
திமுக ஆட்சி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆறுமாத காலத்தில் நான்கு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்/ லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்ற பெயரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறி உள்ளார்
 
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்து அவர்களை சாதனைகளாக்கி வெற்றி நடைபோடும் மாபெரும் மக்கள் இயக்கம் என்றும், இதை அழிக்க இயக்கம் திமுக அரசின் தொடர் முயற்சிகள் கழகத் தொண்டர்கள் நல்லாசியுடன் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்