வாழப்பாடியில் அதிமுக நிர்வாகி வீட்டிலும் ரெய்டு!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:34 IST)
வாழப்பாடியில் அதிமுக நிர்வாகி வீட்டிலும் ரெய்டு!
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் 2 பேர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக வாழப்பாடி அதிமுக நிர்வாகி குபேந்திரன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குபாய் என்ற குபேந்திரன் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவராக இருந்து வருகிறார். குபேந்திரன் சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுகவினரின் வீடுகளில் வளைத்து வளைத்து சோதனை செய்யப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்