திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும்: எடப்பாடி பழனிச்சாமி

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (12:07 IST)
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில வெளியேறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் கூட்டணியில் உள்ளன என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இன்னும் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை என்றும் இந்த பேச்சு வார்த்தையின் போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை ஐந்து தொகுதிகள் மட்டுமே தரப்படும் என திமுக தரப்பில் கூறியதாகவும் அதனால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது.அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நான்கு தொகுதிகள் கேட்பதால் கூட்டணி பேச்சு வார்த்தையில் முரண்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என்றும் அதிமுக கூட்டணி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தை யாராலும் கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்