''சினிமாத் துறையில் பெண்களை மதிப்புடன் நடத்தியிருந்தால்....''- ராஜேஸ்வரி பிரியா

Sinoj

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:15 IST)
''சினிமாத் துறையில் பெண்களை மதிப்புடன் நடத்தியிருந்தால் த்ரிஷா அவர்களுக்கு தற்போது நடக்கும் அவமதிப்பெல்லாம் நடக்காமல் இருந்திருக்கும்'' என்று ராஜேஷ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.
 
இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
 

அவரது பேச்சு குறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஷ்வரி பிரியா  தெரிவித்துள்ளதாவது:

''சினிமாத் துறையில் பெண்களை மதிப்புடன் நடத்தியிருந்தால் த்ரிஷா அவர்களுக்கு தற்போது நடக்கும் அவமதிப்பெல்லாம் நடக்காமல் இருந்திருக்கும்.வாய்ப்புக்காக அலையும் நடிகைகள் பலர் வெளிப்படையாக தங்களை தவறாக நடத்துகிறார்கள் என்று கூறியும் யாருமே கண்டுகொள்வதில்லை.Adjustment என்ற வார்த்தையே யாரும் பயன்படுத்த கூடாது என்று R.K.செல்வமணி ,திரு சேரன் போன்றவர்கள் அறிக்கை வெளியிடுவதில்லை.நடிகைகள் பலர் வாய்ப்பிற்காக தொடங்கிய தவறுகளை பின்னர் பிழைப்பிற்காக செய்பவர்களாக மாற்றப்பட்டு உள்ளனர்.

 
திரைப்படத் துறையில் உள்ள பெண்கள் மீது தொடர்ச்சியாக பல்வேறு விதமான தாக்குதல்கள் வருவதற்கு காரணம் கவர்ச்சி என்ற பெயரில் காட்டும் உச்சகட்டமான ஆபாசமே ஆகும். பெண்களின் கலை உணர்வு (நடிப்பு திறன்)க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உடல் அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை மாறவேண்டும்.பெண்கள் மாறினாலே மாற்றம் நிகழும்'' என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்