எடப்பாடி தரப்பு மிரட்டுகிறது: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பகீர்!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (11:53 IST)
தினகரன் அணியில் இருந்து விலகி தங்கள் அணியில் சேருமாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களை மிரட்டி நெருக்கடி தருவதாக தினகரன் அணியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கூறியுள்ளார்.


 
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதனையடுத்து அந்த பட்டியலில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் பழனியப்பன் ஆகியோர் மீதான பழைய வழக்குகளை தூசி தட்ட ஆரம்பித்தது ஆளும் தரப்பு.
 
இந்நிலையில் தருமபுரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தினகரன் அணியிலிருந்து வெளியேற வலியுறுத்தி தனக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், மிரட்டுவதாகவும் கூறினார்.
 
எத்தகைய நெருக்கடி கொடுத்தாலும் உண்மையான தொண்டர்களை கொண்ட அதிமுக பக்கம்தான் இருப்போம் என்று பழனியப்பன் உறுதிபட தெரிவித்தார். மேலும் அவர் மீது நாமக்கல் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு போடப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் மாறி மாறிப் பேசி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
 
நாமக்கல் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் பழனியப்பன் முன் ஜாமீன் பெற்று சிபிசிஐடி அலுவலகத்தில் பதினைந்து நாள் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்