தேமுதிகவை உடைக்கும் முயற்சியில் பாஜக? - விஜயகாந்த் அதிர்ச்சி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (11:33 IST)
தேமுதிக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு கோபத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியிருக்கிறது.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதன் பின் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியே இருக்கிறார். இந்நிலையில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 30ம் தேதி காரைக்குடியில் நடக்க இருக்கிறது.
 
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் மக்கள் பிரச்சனைக்காக தேமுதிக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. மேலும், தேர்தலில் செலவு செய்த பல வேட்பாளர்கள் கடனாளியாகியுள்ளனர். இந்நிலையில், அப்படி நொந்து போன பலரை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அதன் எதிரொலியாக தர்மபுரி முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் சில நிர்வாகிகள் பாஜகவில் இணைய இருக்கிறார்கள்.
 
தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது, அதில் சில எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சென்றனர். அதேபோல், தேமுதிகவின் பல நிர்வாகிகளை, திமுக தரப்பு தங்கள் பக்கம் இழுத்து விஜயகாந்திற்கு எதிராக செயல்பட வைத்தது.
 
இந்நிலையில், பாஜகவும் தற்போது அந்த வேலையை தொடங்கியுள்ளது, விஜயகாந்திற்கு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்