செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?” என கேள்வி கேட்டுள்ளார்.
கமல்ஹாசன் சமீப காலமாக கள அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீட், காஷ்மீர் பிரச்சனை, ஹிந்தி திணிப்பு, ஆகியவற்றை குறித்து ஆளும் அரசை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கமலின் அரசியல் நுழைவு குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ”கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?”, தொண்டர்களாவது தனடு படத்தை பார்க்கட்டும் என்று தான் நடித்துக்கொண்டிருக்கிறார்” என பதிலளித்துள்ளார்.
முன்னதாக ரஜினிகாந்த், தமிழகத்தில் வெற்றிடம் நிழவுகிறது என கூறியதற்கு பதிலளித்த முதல்வர், “ரஜினி என்ன தலைவரா?” என கேட்டார். இந்நிலையில் தற்போது “கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்” என முதல்வர் ஆவேசமாக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.