அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:43 IST)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூபாய் 60 கோடி சேர்த்து சேர்த்ததற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் எனவே அமைச்சர் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் எனவே தங்களையும் ஒரு தரப்பாக வழக்கில் இணைக்குமாறு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.
 
கடந்த 2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது
 
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் இருப்பதால் தஙகளையும் இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீது விசாரணை கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் மனு அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்