இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்ட நிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.