அமலாக்கத்துறை குறி வைக்கும் அடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனா? புதிய மனு தாக்கல்..!

புதன், 19 ஜூலை 2023 (10:31 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடியை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த வழக்கில் அமலாக்கத்துறை இணைய நீதிமன்றம் அனுமதி அளித்தால்  அமலாக்கத்துறை சில அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குறி வைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்