இன்று மாலை பொன்முடி, மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில் அவர்களிடம் கேட்க 100 கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
செம்மண் குவாரி தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசாரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆம், இல்லை என பதிலளிக்கும் வகையில் கேள்விகளை தயார் செய்து இருவரிடமும் அமலாக்கத்துறை தனித்தனியாகவும் இணைந்தும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.