அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு.. வீடு திரும்பியதாக தகவல்..!

புதன், 19 ஜூலை 2023 (06:57 IST)
அமைச்சர் பொன்முடி இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு மணி நேரம் நேற்று விசாரணை செய்த நிலையில் விசாரணைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் நேற்று  அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் ஆம் இல்லை என்று பதில் தரக்கூடிய வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின் அமைச்சர் பொன்முடி வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் பொன்முடிக்கு சொந்தமான சுமார் 42 கோடி  ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
இந்த வழக்கில் அமலாக்கதுறையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்