பேருந்துகளை அடுத்து மின்சாரத்தில் தொடங்குகிறது பிரச்சனை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (22:46 IST)
கடந்த மாதம் போக்குவரத்து ஊழியர்களின் பத்து நாட்கள் தொடர் போராட்டத்தை அடுத்து பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒருவழியாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்து நிலைமை சீராகியுள்ள நிலையில் தற்போது மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் மின்வாரிய ஊழியர்கள் முன்வைத்து இதற்காக அரசு மின்வாரிய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை திட்டமிட்டபடி நடத்தி முடிக்காததை கண்டித்து வேலைநிறுத்த போராட்டம் செய்ய மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மீண்டும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பேருந்து ஓடவில்லை என்றாலும் ஷேர் ஆட்டோ, ஆட்டோ என சமாளிக்கலாம். ஆனால் மின்சாரம் தடைபட்டால் என்ன செய்வது? என்ற அச்சத்தில் உள்ள பொதுமக்களை காக்க வேண்டியது அரசின் கடமை என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்