அரசுப் பள்ளியில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து.. மாணவர்களை காப்பாற்றிய ஊர்மக்கள்..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (15:17 IST)
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்களை ஊர் மக்கள் காப்பாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
திருவாரூர் அருகே நன்னிலம் என்ற பகுதி அருகே அரசு பள்ளி ஒன்று கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று காலை நன்னிலம் அரசு பள்ளியில் திடீர் என சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஊர் மக்கள் தீ விபத்தையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குள் சென்று அங்கிருந்து மாணவ மாணவிகளை காப்பாற்றினர். இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்